ஆபரேசன் சிந்தூர்” சர்வதேச விளக்க குழுவில் இருந்து பாலியல் குற்றவாளியான பாஜகவின் எம்.ஜே.அக்பர் விலக வேண்டும்
இந்திய ஊடகப் பெண்கள் வலையமைப்பு வலியுறுத்தல்
புதுதில்லி “ஆபரேசன் சிந்தூர்” தாக்கு தல் தொடர்பாக உலக நாடுகளுக்கு எடுத்து ரைக்க மோடி அரசு அனைத்துக் கட்சிகள் அடங்கிய 7 குழுக்களை அமைத்துள்ளது. இதில் 2ஆவது குழுவில் மூத்த பத்திரிகையாள ரும், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சருமான எம்.ஜே.அக்பரை மோடி அரசு தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், பாலியல் குற்றச் சாட்டில் சிக்கிய எம்.ஜே.அக்பரை “ஆபரேசன் சிந்தூர்” தாக்குதல் தொ டர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதி கள் குழுவில் சேர்த்து இருப்பது மிக மோசமானது என இந்திய ஊடகப் பெண்கள் வலையமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமை ப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குத லுக்கு பதிலளிக்கும் விதமாக மே 7ஆம் தேதி இந்திய ராணுவத்தால் “ஆபரேசன் சிந்தூர்” தாக்குதல் நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்கு தலால் பல பெண்கள் விதவைகளா கினர். அதனால் “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கை ஒரு இரா ணுவ பதிலடியாக மட்டுமல்லாமல், இந்தியப் பெண்களின் மன உறு திக்கு அஞ்சலி செலுத்தும் விதமா கவும், இந்தியப் பெண்களின் கவுர வத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்கும் ஒரு பணியாகவும் முன்மொழியப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் “ஆப ரேசன் சிந்தூர்” நடவடிக்கை தொ டர்பாக உலகநாடுகளுக்கு எடுத்து ரைக்க மோடி அரசு அமைத்துள்ள அனைத்துக் கட்சிகள் குழுவில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் எம்.ஜே.அக்பரைச் சேர்த்ததற்கு இந்திய ஊடகப் பெண்கள் வலை யமைப்பு (NWMI - The Network of Women in Media) கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. பல பெண்கள், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எம்.ஜே.அக்பர் மீது குற்றம் சாட்டி யுள்ளனர். அவர்களில் பெரும்பா லோர் பத்திரிகையாளர்கள் ஆவர். பல ஆண்டுகளாக எம்.ஜே. அக்பரால் தாங்கள் வேட்டையா டும் நடத்தை, பாலியல் துன்புறுத் தல் அல்லது பாலியல் தொடர் பான தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறிய பல பெண் பத்திரிகையாளர் கள், 2018ஆம் ஆண்டில் “மீ டூ (#MeToo)” இயக்கத்தின் போது தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். குறைந்தது 20 பெண் கள் எம்.ஜே.அக்பருக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயாராக இருந்த னர். இந்த பாலியல் குற்றச்சாட்டு கள் விரிவானவை.மேலும் அவை பரவலாகப் புகாரளிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு வருக்கு எதிராக எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவர் தோல்வியடைந்தார். பிப்ர வரி 2021இல் அந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவில் பெண்கள் உரிமைகள் மற்றும் பணியிடப் பாதுகாப்பிற்கான ஒரு மைல்கல்லாகப் பாராட்டப்பட்டது. அதனால் “ஆபரேசன் சிந்தூர்” சர்வதேச விளக்க குழுவில் எம்.ஜே.அக்பரை சேர்த்து இருப்பது பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பியவர்களுக்கு ஒரு பிற்போக் குத்தனமான சமிக்ஞையை அனுப்பும் அபாயத்தை ஏற்படுத்து கிறது. அதே போல பாலின நீதி தொடர்பான பிரச்சனைகளில் இந்தியாவின் நம்பகத்தன்மை யைக் குறைக்கிறது. எனவே இந்திய பிரதிநிதிகள் பெண்களுக் கான கண்ணியம், மரியாதை மற்றும் நீதி ஆகியவற்றின் மதிப்பு களை உண்மையிலேயே பிரதி பலிப்பதை உறுதி செய்வதற்காக, தூதுக்குழுவிலிருந்து எம்.ஜே. அக்பர் விலக வேண்டும்” என இந்திய ஊடகப் பெண்கள் வலைய மைப்பு அறிக்கை மூலம் வலி யுறுத்தியுள்ளது.